வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா.. சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் துரைமுருகன் : பணி நியமன ஆணை!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 6:51 pm

வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா.. சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் துரைமுருகன் : பணி நியமன ஆணை!

வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா இன்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கியது.

இந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றார்.

இந்த புத்தகக் கண்காட்சியில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு தலைசிறந்த எழுத்தாளர்களின் கல்வி, பொருளாதாரம் அரசியல், வரலாறு உட்பட பல்வேறு வகையான சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து,100 தனியார் நிறுவனங்கள் மூலம் 40 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 661

    0

    0