சரக்கு வாகனம் மீது மோதிய பைக்.. நொடியில் உயிரிழந்த இளைஞர் : நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 4:27 pm

மதுரை : வாடிப்பட்டியில் சாலையை கடக்க காத்திருந்த சரக்கு வாகனம் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டன் பகுதியை சேர்ந்த குருசாமி. இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வாகனத்தை ஒட்டி சென்று நான்கு வழிச்சாலையை கடக்க சாலையில் காத்திருந்தார்.

அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அருண் (வயது 20) என்ற இளைஞர் சரக்கு வாகனத்தின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் இளைஞர் அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!