ஆளுங்கட்சிக்கு மட்டும் தனி சட்டமா..? தேர்தல் அலுவலகத்தில் போலீசார் பாரபட்சம் காட்டுவதாக பாஜக புகார்.. இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு—!!
Author: kavin kumar3 February 2022, 4:27 pm
திருச்சி : திருச்சியில் தேர்தல் மனு தாக்கல் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் வந்த பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நாளை முடிவடைய உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் பாஜகவினர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்றனர். பின்னர் வேட்பாளருடன் அனைவரும் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் செல்ல முற்பட்டனர்.
அவர்களை காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில் பாஜகவினரும் காவல்துறையில் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஆளும் கட்சியைத் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்யும் போது இரண்டுக்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படும் போது எங்களை ஏன் அனுமதிக்கவில்லை எனக் கோஷமிட்டு அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். பின்னர் வேட்பாளர் மற்றும் அவருடன் இரண்டு பேர் மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
1