நள்ளிரவில் டீக்கடையில் பாஜகவினர் போட்ட PLAN… சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை : கோவையில் பரபரப்பு!
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
தகவலை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பறக்கும் படையினருக்கு அனுப்பப்பட்டது. தகவலின் அடிப்படையில், துணை மாநில வரி அலுவலர் புஷ்பா தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் காளீஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பூலுவபட்டி மாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர்.
தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை கைப்பற்றியதுடன், பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர். மேலும், பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர்.
பணம், வாக்காளர்கள் விவரம் பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவை சார்ந்த ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலில் மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தொடர் விடுமுறை..மலைக்க வைத்த மது விற்பனை வசூல்.. TASMAC நிர்வாகம் வெளியிட்ட ரிப்போர்ட்..!!!
தொடர்ந்து, ஆலந்துறை காவல் நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.