புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலம்… உடலை மீட்ட போலீசார் : விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2023, 11:43 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி செல்லும் சாலையில் தனியார் நூற்பாலை அருகே வத்தலகுண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் விஜயகுமார் (வயது 42) என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இவருக்கும் இவரது மனைவி விஜயநளினிக்கும் (வயது 38) அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது இதனால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் விஜயகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வந்தவர் நிலக்கோட்டை அருகே மரத்தில் இருசக்கர வாகனத்தின் மேல் ஏறி நின்று புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்