அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவனின் சடலம்.. விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 1:08 pm

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் என்பவரது மகன் சக்தி 22 இவர் இறுதி ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார் .

இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிய நிலையில் காலையில் சக நண்பர்கள் அவரை எழுப்பச் சென்றபோது கதவு திறக்கவில்லை என கூறப்படுகிறது. உள்ளே அவர் படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது மாணவர் சக்தி உயிரிழந்தது தெரியவந்தது
அதன் பிறகு சக்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!