பாழடைந்த பங்களாவில் அலங்கோலமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் பகீர்… திருச்சியில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 11:53 am

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு 2மகனும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கியுள்ளார். பின்னர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் சபுரா பீவி வீட்டில் இல்லாதது குறித்து அவரது உறவினர்கள் பொன்மலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பாாத்தபோது, அங்கு சபுராபீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 602

    0

    0