தனியார் கல்லூரி அருகே முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை சடலம் : விசாரணையில் திடுக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 1:23 pm

தனியார் கல்லூரி அருகே முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை சடலம் : விசாரணையில் திடுக்!!!

கோவில்பாளையம் அருகில் சாலையோரம் புதரில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம்- கோவை நகருக்குள் வரும் சாலையில் தனியார் கல்லூரி அருகே சாலையோரம் புதர் நிறைந்த இடத்தில் பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

நேற்று மாலை இதனை பார்த்த அவ்வழியாகச் சென்ற மக்கள் கோவில்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு ESI மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு தனி படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சாலையோரம் பச்சிளம் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 388

    0

    0