கொலை என கண்டெக்கப்பட்ட ஓட்டுநரின் சடலம் : சிசிடிவி காட்சி மூலம் விபத்து என கண்டுபிடிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 11:48 am

கோவை : தலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில், ஹேண்ட்பிரேக் போடாததால் ஓடிய லாரியை நிறுத்த முயன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் கடந்த 17 ஆம் தேதி சேலத்திலிருந்து சரக்குகளை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரம் பகுதிக்கு உள்ள குடோனிற்கு எடுத்து வந்துள்ளார்.

51 வயதான சுரேஷ்பாபு, கோவை மாவட்டம் சரக்குகளை இறக்கி வைக்கும் இடமான அன்னூர் சாலை கடுவேட்டிப்பாளையம் அருகே வந்தபோது லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, லாரியின் முன்பு நின்றுக்கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்.
அப்போது, லாரி ஹேன்ட்பிரேக் போடாததால், நிற்கும் இடத்திலிருந்து தானாக இயங்கி வந்துள்ளது. இதைபார்த்த ஓட்டுநர் சுரேஷ்பாபு வாகனத்தின் முன் பகுதியில் தள்ளி பிடிக்க முயன்றுள்ளார்.

அதற்குள் லாரி சாலையிலிருந்து கீழே இறங்கி குழியில் சென்றதால், ஓட்டுநர் கீழே விழுந்து லாரியின் இடையில் சிக்கி அடிபட்டு உயிரிழந்துள்ளார். காலையில் சடலத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தலையில் காயங்கள் இருந்ததால், சுரேஷ்பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்துள்ளது. பிறகு, சம்பவ இடத்திற்கு எதிரே இருந்த பெட்ரோல் பங்க் இன் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது, கொலை அல்ல விபத்து என்பது தெரியவந்துள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?