‘தமிழகத்தில் கொத்தடிமை தொழில் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்’: மீண்டு வந்தவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை..!!

Author: Rajesh
9 February 2022, 3:36 pm

சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் அரசால் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள், நல சங்கத்தை உருவாக்கி உள்ளனர். சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய, பச்சையம்மாள் (கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்டவர்) கூறியதாவது, கொத்தடிமை குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி நிவாரண தொகையை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கி கணக்கில் மட்டுமே பணம் செலுத்தப்பட வேண்டும். முழு மறுவாழ்வுக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வழக்கு நிறைவு பெற காத்திருக்காமல் நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.

கொத்தடிமை தொழில் முறையை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்து வருவதாக அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 816

    0

    0