துணி வாங்குவது போல கடையில் புகுந்து கல்லாவில் ரூ.65 ஆயிரம் திருடிய சிறுவன்.. காட்டிக் கொடுத்த வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 8:08 pm

மதுரை நரிமேடு அருகே அஜித்குமார் என்பவர் மென்ஸ்வேர் ரெடிமேட் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

இவர் கடையில் நேற்றிரவு 9 மணியளவில் கடைக்காரர் பரபரப்பாக வியாபரம் செய்தபோது சிறுவன் ஒருவன் துணி வாங்குவது போல் வந்து நைசாக‌ பில் போடும் இடத்திற்கு வந்து பணம் வைத்திருக்கும் பெட்டியை திறந்து 65ஆயிரம் ரூபாயை திருடி சென்று விட்டார்.

கடை அடைக்கும் முன்னர் கல்லாப் பெட்டியில் பணம் குறைவாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது ரு சிறுவன் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

உடனை இது குறித்து தல்லாக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடி சென்ற சிறுவனை தேடி வருகின்றனர்.

பரப்பரப்பான சாலையில் இயங்கி வரும் ஜவுளிக்கடை யில் சிறுவன் சர்வ சாதாரணமாக திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி