பெண் பயிற்சி மருத்துவர் மீது ஆடையை கழற்றி பாய்ந்த வாலிபர்.. கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 12:46 pm

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வாகன நிற்கும் இடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார்.

அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி விட்டு அந்த பயிற்சி பெண் மருத்துவர் மீது பாய்ந்து தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு காவலாளி ஓடி வந்தார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.

இது பற்றி சக பயிற்சி மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தெரிவித்தார். இதற்கிடையில் நள்ளிரவில் ஒரு மணி அளவில் அதே வாலிபர் சிறிய காயத்துடன் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.

அவரை அடையாளம் கண்டு கொண்ட பயிற்சி மருத்துவர்கள் மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மயான்க் கலார் என்பது தெரிய வந்தது.

மேலும் அவருடன் கோவைக்கு வந்தவர்கள் ரயில் நிலையத்தில் தனியாக விட்டு, விட்டு சென்றதாகவும், இதனால் அவர் அங்கே மூன்று நாட்கள் சுற்றித் திரிந்ததாகவும், தெரிவித்ததாக தெரிகிறது.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கும் அந்த வாலிபரை காவல் துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 217

    0

    0