பானிபூரி சாப்பிட்ட சிறுவன் திடீர் மயக்கம்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 1:52 pm

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லதம்பி கவுண்டர் தெருவில் வசிக்கும் ராஜா என்பவரின் மகன் மௌலி ராஜ் (5.5 வயது) என்ற சிறுவன் வாழப்பாடி பயணியர் மாளிகை எதிரே உள்ள பானி பூரி கடையில் பானிபூரி சாப்பிட்டதாக கூறப்படுகிறது,

உடனே வாந்தி மயக்கம் ஏற்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலீடு செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

வாழப்பாடி பகுதியில் இதே போல் அதிகம் ஆங்காங்கே பானிபூரி கடைகள் விற்று வருவதால் இதற்கு சுகாதாரத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 268

    0

    0