காதணி விழாவுக்கு சீர்வரிசையுடன் சாரட்டு வண்டியில் வந்த சிறுவன் : கோவையின் அடையாள சின்னம் வைத்து அசத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 4:16 pm

கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த காதணி விழாவிற்கு கோவையில் அடையாள சின்னங்களான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனர்.

கோவையை பொருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாள சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தே சண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாக தெரிவித்தனர்.

  • Mersal Film is Flop or hit Says Producer Hema Rukmani மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!