விளையாடும் போது கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன்: நீண்ட போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு…
Author: kavin kumar25 February 2022, 2:41 pm
புதுச்சேரி : புதுச்சேரியில் 5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது
புதுச்சேரி அரியாங்குப்பம், ஒடவேலி பகுதியை சேர்ந்தவர் தவமணி – மாலா தம்பதியினர். இவர்களுக்கு குருமூர்த்தி (5) என்ற மகனும், 3 வயதில் ஒரு மகளும், 3 மாதமான ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குருமூர்த்தி தனது வீட்டின் பின்புறம் விலையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த கிணற்றில் தவரி விழுந்தான். இதனை பார்த்த அவரது தாய் அலறியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் குருமூர்த்தியை கிணற்றில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் போலீசார், சிறவனின் உடலை கைப்பற்றி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.