மனைவியை கிண்டல் செய்த சிறுவன்.. தட்டிக் கேட்ட கணவனை கஞ்சா போதையில் கொலை செய்த கொடூரம் : கடலூரில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 9:11 am

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணலூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜயகுமார் (வயது 32). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.

சித்ரா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய நவீன் என்ற சிறுவன் சித்ராவை கேலி கிண்டல் செய்துள்ளான்.

இது குறித்து சித்ரா தனது கணவரிடம் கூற, இதையடுத்து விஜய்குமார், ராஜேந்திரன் மகன் நவீனை தட்டிக் கேட்டதுடன் கத்தியால் கழுத்து பகுதியில் கீரியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த சிறுவன் கஞ்சா போதையில் தனது வீட்டில் கத்தியை எடுத்து விஜயகுமாரின் கழுத்தில் குத்தியுள்ளார்.

விஜயகுமார் ரத்தம் கொட்டிய நிலையில் பகுதியில் கிடைக்க, அப்பகுதி மக்கள் விஜயகுமாரை விருத்தாசலம் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தபோது,அவரை பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

இதனை எடுத்து உயிரிழந்த விஜயகுமார் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனை பிணவ அருகில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டது.

இதனையடுத்து,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!