கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் : ஆழமான பகுதியில் மூழ்கி பலியான சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 9:41 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர் கூலி தொழிலாளி அவருடைய மகன் ஹரிதாஸ் (14) என்பவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று நண்பர்களுடன் இதே கிராமத்தில் உள்ள கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். திடீரென தண்ணீரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 15 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு ஹரிதாஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

நண்பர்களுடன் குளத்தில் குளித்து சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 444

    0

    0