தீ விபத்தில் சிக்கிய சிறுவன்…. உடல் நலம் தேறி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் நடந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 1:39 pm

கோவை : அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்த ராஜன் (வயது 50) என்பவர் பிளம்பராக உள்ளார். இவரது மூத்த மகன் கவுதம் (வயது 13). ராமநாதபுரம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி கவுதம் தனது நண்பர்களுடன் ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு கார் ஒர்க்‌ஷாப் அருகே விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியது. இதில் அருகே விளையாடிக்கொண்டிருந்த கவுதமின் உடலில் தீ பற்றியது. வலியால் துடித்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒரு மாத சிகிச்சைக்கு பின்பு ஏப்ரல் 25ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினான். ஆனால் மீண்டும் சில நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!