அடிக்கடி உல்லாசம்.. காதலிக்கு தெரியாமல் வீடியோ எடுத்த காதலன்.. 17 வயது சிறுமியை மிரட்டி மிரட்டி காரியத்தை சாதித்த இளைஞர்..!!
Author: Babu Lakshmanan17 October 2022, 4:50 pm
மதுரை அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி, நகை மற்றும ரொக்கத்தை பறித்து வந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வருகிறார். மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. காலப்போக்கில், “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்,” எனக் கூறி மதுரை நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சன்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை வீடியோ காட்சிகளாகவும் எடுத்து வைத்துக் கொண்டு, தன்னை நம்பிய பெண்ணை, “நான் கேட்டதை தரவில்லை என்று சொன்னால், இந்த காட்சிகளை வலைதளத்தில் பதிவிடுவேன், அதே சமயம் உனது தாய், தந்தைக்கும் அனுப்புவேன்,” என்று கூறி அவரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 118 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மிரட்டி வாங்கியுள்ளார்.
நேற்று வழக்கம்போல் அவரை மிரட்டி ரூபாய் 50,000 கேட்டுள்ளார். பீரோவில் இருந்த 50 ஆயிரத்தை அந்தப் பெண் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பணம் காணாமல் போனதை கண்ட பெற்றோர், அதிர்ந்து போய் பணம் யார் எடுத்தது, நான் காவல்துறையிடம் புகார் அளிக்க போகிறேன் என்று தந்தை மிரட்டியதும், நடந்த அத்தனை விஷயங்களை அந்த சிறுமி கூறியிருக்கிறாள்.
அதன் அடிப்படையில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்ததின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர் சந்துருவை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
காதல் என்ற பெயரில் இந்த காலத்து பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதை காரணத்தினால் திரையில் வரும் காதல் வேறு, நிஜத்தில் வரும் காதல் வேறு, என்பதை உணர்ந்து, பெற்றோர்கள் சம்மதிக்கும் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, அதேபோல அன்றாட வாழ்வில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் பெற்றோர்களோடு கலந்து ஆலோசித்தால் மட்டுமே, இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.