பக்கத்துலதான் அமைச்சர் வீடு.. ஆனா ரோட்ட பாருங்க.. ரெண்டு வருஷமா இப்படித்தான் இருக்கு : வைரலாகும் சிறுவனின் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 8:26 pm

அமைச்சர் மனோ தங்கராஜ் வீட்டின் அருகில் உள்ள சாலையின் அவல நிலை குறித்து சிறுவன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே முசுறி சந்திப்பிலிருந்து பாலூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணபட்டு சாலை இருந்த அடையாளமே இல்லாத அளவிற்கு காட்சியளிக்கிறது.

தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜின் வீட்டின் அருகே உள்ள இந்த சாலை குறித்து சிறுவன் ஒருவர் காரில் செல்லும் போது எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/820916215?share=copy

அந்த வீடியோவில் தனது தந்தையுடன் காரில் செல்லும் போது எடுக்கபட்டு அதில் அமைச்சர் வீடருகே சாலை இப்படியிருந்தால் மாநில சாலைகள் எப்படியிருக்கும் என கேட்கபட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி