தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டுக்கு அழைத்த சென்ற மணப்பெண் : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2023, 8:19 pm
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் உள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபருக்கும் நேற்று நாகமலைப்புதுக் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தனது வீட்டில் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்., தனது உறவினர்களுக்கும் ஜல்லிகட்டு காளையை அறிமுகம் செய்து வைத்தனர் மணமக்கள். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.