புதைத்த சகோதரரின் உடலை 18 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்த அண்ணன்… சந்தேகத்தை கிளப்பிய வீடியோ..!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 4:05 pm

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வாகன விபத்தில் இறந்த தனது தம்பியின் உடலை, 18 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (60). இவர் கடந்த 12 ம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அவர்கள் தாய், தந்தையர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைத் தோட்டத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவரது சகோதரரான கிறிஸ்டோபர் என்பவர், தனது மனைவி மற்றும் ஒரு சிலரோடு வந்து ஜெஸ்டஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.

அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அதனை மீறி கிறிஸ்டோபர் ஜெஸ்டஸின் உடலை தோண்டி எடுத்து மாற்று இடத்தில் சிறிய அளவு பள்ளம் தோண்டி அதில் அடக்கம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் இது சம்பந்தமாக அவரது மகன் ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!