குடும்பத்தை நாசமாக்கிய குடிபோதை: தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் தப்பியோட்டம்..!!

Author: Rajesh
10 April 2022, 11:07 am

கோவை: மேட்டுப்பாளையத்தில் குடிபோதையில் தம்பியை அண்ணன் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விநாயகசுந்தரம். இவரது மகன் பாண்டி டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் சந்தானம் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் நேற்று மாலை 5 மணிக்கு சிறுமுகை திருவள்ளுவர் பகுதியில் உள்ள பாண்டியின் வீட்டில் மது குடித்துவிட்டு பேசி கொண்டு இருக்கும் போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்ப்படுகிறது.

இதில் கோபம் அடைந்த பாண்டியின் அண்ணன் சந்தானம் அருகில் இருந்த கத்திரிகோலை எடுத்து பாண்டியின் வயிற்றின் இடது பக்கத்திலும்,வலது புற கழுத்திலும்,வலது புற காதிலும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

பாண்டியின் சத்தத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் சின்னசாமி வந்து பார்க்கும் போது ரத்து வெள்ளத்தில் பாண்டி கிழே விழுந்து இருந்து உள்ளார். இதையெடுத்து அவரை மீட்டு சிறுமுகை ஶ்ரீனிவாசா மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமுகை காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை காவல் ஆய்வாளர் வேளாங்கண்ணி உதய ரேகா,உதவி ஆய்வாளர் லெனின் அப்பாதுரை,தனிப்பிரிவு தலைமை காவலர் ராஜேஷ் மற்றும் போலீசார் தப்பியோடிய சந்தானத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1352

    0

    0