உடன் பிறந்த தங்கையை அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்துள்ளது.
தங்கை என்று கூட பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானாள். 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே மாணவியை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் உடன் பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
This website uses cookies.