பயப்படாத வந்த வேலை முடிஞ்சுது.. அண்ண ஒண்ணும் பண்ணமாட்ட : சாலையை கடந்த ஒற்றை யானையை பார்த்து அலறிய பேருந்து பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 12:23 pm

நீலகிரி : குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் சாலையில் நடுவே ஒற்றை யானை நடந்து வந்ததை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி அச்சத்துடன் பார்த்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம், போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள்,பழங்கள்,மூங்கில்கள் உள்ளன.

நீலகிரியில் தற்போது பனிகாலம் முடிந்து இதமான கால நிலை நிலவுவதால் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் அடிக்கடி சாலையில் வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனம் ஓட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருவதால் பகல் மற்றும் இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனங்களில் பயணிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!