ஈரக்குலையே நடுங்கிருச்சு… ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்த கன்றுக்குட்டி : கண்ணீர் வர வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 2:23 pm

புதுச்சேரி வினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் ஒன்று உள்ளது. ஆனால், இந்த இடத்துக்கு அரசின் அனுமதி பெறவில்லை.

இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இடத்தில் மாடுகள் வெட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.. அந்தவகையில், இந்த பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்று சுற்றி சுற்றி வந்தது.. அழுதுகொண்டே இருந்தது..

“மா…மா” என்று ஒரே இடத்தில் அழுதபடியே வட்டமடித்தது.. அந்த வழியாக வந்தவர்கள், கன்றுக்குட்டி அழுவதை பார்த்து, “வாயில்லா ஜீவன்களுக்கான அமைப்பு”க்கு தகவல் தந்துள்ளனர்.

அவர்கள் வந்து விசாரிக்கும்போது விஷயம் வெளிவந்தது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த இடத்தில் பசு ஒன்று கறிக்காக வெட்டப்பட்டுள்ளது.

இதை அந்த கன்றுக்குட்டி பார்த்துள்ளது. அதனால், தன் அம்மாவை தேடி, அது வெட்டப்பட்ட இடத்துக்கே வந்து அழுது கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

வாயில்லா ஜீவன்களுக்கான அமைப்பு தலைவர் அசோக் ராஜ், இந்த வீடியோவை எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.. புதுச்சேரியில் அனுமதிக்கப்படாத பல இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன.

மறைமுகமான இடத்தில் மட்டுமே இவைகளை வைத்து வெட்ட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி புதுச்சேரியில் பொது இடங்களில் வெட்டப்படுகின்றன.

இவற்றை தடுக்க வேண்டும் என்றும், நோய்வாய்ப்பட்ட ஆடு, மாடுகளை வெட்டக்கூடாது, அதிலும் கன்றுகளை வெட்டவே கூடாது என்றெல்லாம் விதிகள் உள்ளன.. இதில் எந்த விதியும் அங்கு பின்பற்றப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?