கடும் வெயிலில் கேஸ் சிலிண்டரை தலையில் வைத்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : அனுதாபப்பட்ட மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 2:16 pm

கடும் வெயிலில் கேஸ் சிலிண்டரை தலையில் வைத்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : அனுதாபப்பட்ட மக்கள்!

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் எம் ஆறுமுகம் என்பவர் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஒதுக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு பிரச்சாரம் செய்யும் வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட விழுப்புரம் நகரின் முக்கிய பகுதிகளில் கேஸ் சிலிண்டரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

கேஸ் சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து தூக்க முடியாமல் தூக்கிச் சென்று கடும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆறுமுகத்தை ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் விழுப்புரம் மக்கள் பார்த்துச் சென்றனர்

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?