வெள்ளத்தில் மிதந்து வந்த கார்… உள்ளே இருந்து வந்த குழந்தையின் அழுகை : கைக்கோர்த்த மனிதநேயம்.. நெகிழ வைத்த காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 2:57 pm

வெள்ளத்தில் மிதந்து வந்த கார்… உள்ளே இருந்து வந்த குழந்தையின் அழுகை : கைக்கோர்த்த மனிதநேயம்.. நெகிழ வைத்த காட்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத வகையில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கூடன்குளத்தில் இருந்து விருதுநகருக்கு சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. ஒரு கட்டத்துக்கு மேல் தத்தளித்து வெள்ளத்தில் கார் மிதந்தது.

இதையடுத்து கார் மிதந்து வருவதை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் உடனே காரை மீட்க சென்றனர். அப்போது காருக்கு இருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்டது. உடனே காரை மீட்டு உள்ளே இருந்த 3 மாத குழந்தை உட்பட உள்ளிருந்த 5 பேரை அப்பகுதியினர் மீட்டனர்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?