சாலையை கடக்கும் போது இடித்து தூக்கிய கார்.. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 4:58 pm

சாலையை கடக்கும் போது இடித்து தூக்கிய கார்.. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய அதிமுக ஒன்றிய செயலாளர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பவர் சாம்பசிவம். இவர் நேற்று மாலை முன்னாள் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்துடன் முன்னாள் எம்எல்ஏ காரில் மதுரையில் நடக்கும் அதிமுக மாநாடு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பந்தலை பார்வையிட்டு மீண்டும் நேற்று இரவு புதுக்கோட்டை திரும்பினார்.

அப்போது அவரது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் முத்துடையான் பட்டி அருகே காரிலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் மீது மோதியது. இதில் சாம்பசிவம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!