பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு… 8 வருடங்களுக்கு பின் நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 5:05 pm
Quick Share

கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு தாமரைக் கண்ணன் என்ற பட்டியல் இன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தாமரை கண்ணன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞரை 14 பேர் அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்.டி.சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி உத்திரவிட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். ஜெயசிங் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்தார்.

விக்கி ,மகேந்திரன், கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ் , பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.

கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைப்பெற்ற தாமரைச்செல்வன் என்பவரின் கொலை வழக்கில் நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பளித்தது உத்தரவிட்டார் 147, 148, 452, 307, 302 IPC & 3(2) (V,a) SC/ ST POA சட்டம் 2015 உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தண்டனை பெற்றவர்களின் விபரம் :

1.தல விக்கி- இரட்டை ஆயுள் தண்டனை

2.தோப்பு மகேந்திரன் – இரட்டை ஆயுள் தண்டனை

3.கார்த்திக் @ டிப்ஸ் கார்த்திக் – இரட்டை ஆயுள் தண்டனை

4.கவாஸ்கான்- இரட்டை ஆயுள் தண்டனை

5.ஜெய்சிங்(இறந்தார்)

6.சுரேஷ் @ வால் சுரேஷ் – இரட்டை ஆயுள் தண்டனை

7.பிரகாஷ் – இரட்டை தண்டனை

8.நவீன் @ நந்து நவீன் – இரட்டை ஆயுள் தண்டனை

9.கௌதம் @ கருப்பு கௌதம் – ஆயுள் தண்டனை+ரூ5000 அபராதம்

10.விமல் – இரட்டை ஆயுள் தண்டனை

11.விஜய்- (விடுதலை- 15.07.24)- C4 HS-04/2020-

12.சைமன் கிறிஸ்டோபர் – ஆயுள் தண்டனை+ ரூ5000 அபராதம்

13.கௌதம் @ ஒன்ட்ராய் கௌதம் – இரட்டை ஆயுள் தண்டனை

14.கண்ணாச்சி கலைவாணன் – இரட்டை ஆயுள் தண்டனை

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 267

    0

    0