ரோட்டில் சென்ற காரில் திடீர் தீ காரில் இருந்தவர்கள் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 7:08 pm

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட
தாளப்புழா பகுதி வழியாக கொடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென காரின் முன்பிருந்து புகை எழுந்தது. உடனடியாக அவர்கள் காரை நிறுத்தி விட்டு காரிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் புகை எழுந்த பகுதியிலிருந்து தீ எழுந்து மளமளவென படர்ந்தது.

உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் ஆட்டோ டாக்சி டிரைவர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். காரிலிருந்தவர்கள் விரைந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!