கிணற்றில் விழுந்த செல்போன்… குடிபோதையில் குதித்த போதை ஆசாமி.. நள்ளிரவில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2023, 1:49 pm

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள 30 அடி கிணற்றில் செல்போன் தவறி விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக குடிபோதையில் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

ஆனால் மேலே வர முடியாமல் 20 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஜெயக்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், ஜெயக்குமாரை உயிருடன் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.பலத்த மழை, மிகுந்த இருள் சூழ்நிலையும் கடும் குளிரையும் என எதையும் பொருட்படுத்தாமல் இக்கட்டான சூழ்நிலையில் தீயணைப்பு வீரர் மகேந்திரன் கிணற்றில் இறங்கி உயிருக்காக போராடி கொண்டிருந்த ஜெயக்குமாரை உயிருடன் மீட்டனர்.

கடுமையான சூழலில் குடிபோதையில் கிணற்றில் விழுந்த நபரை மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?