செல்போன் பயனாளர்களே கொஞ்சம் உஷார்… பேண்ட் பாக்கெட்டில் வைத்த செல்போன் வெடித்து சிதறியது : காயங்களுடன் உயிர்தப்பிய வாலிபர்…!!

Author: Babu Lakshmanan
19 September 2022, 4:18 pm

ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம் பகுதி சேர்ந்தவர் முத்து(22). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினர்கள் விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்ப கொண்டக்குப்பம் பகுதியிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு அவர்களது உறவினரை அழைத்து வந்து ரயில் ஏற்றிவிட்டுள்ளார்.

பிறகு மீண்டும் செட்டித்தாங்கல் வழியாக கொண்டக்குப்பம் பகுதியை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவரது செல்போன் (narzo 50A android mobile) திடீரென வெடித்தது. இதில், தொடை பகுதியில் காயம் ஏற்பட்ட முத்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!