துணை முதல்வர் பதவியா? அதெல்லாம் சும்மா… முதலமைச்சர் மிக முக்கிய முடிவை எடுக்க போறாரு : உதயநிதி ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 1:33 pm

சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுக்கு தமிழக மக்கள் தரமான பதிலடி கொடுத்துள்ளதாகவும், மோடி ஆயிரம் முறை தமிழகம் வந்தாலும் தமிழக மக்கள் பாஜகவுக்க வாக்களிக்க மாட்டார்கள் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உங்களின் பொறுப்பு மாற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அவர் கூறுகையில், பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என திமுகவினர் பேசி வருகிறார்கள். துணை முதலமைச்ச பதவி தனக்கு வழங்கப்படுவதாக கூறி வரும் தகவல் வதந்தியே என்றும், இளைஞரணி பதவியே மனத்திற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!