மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2025, 1:21 pm

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.

இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மும்மொழிக் கொள்கையான மூன்றாவது மொழி விருப்ப மொழியாக தான் பயில வேண்டுமே தவிர திணிக்கக்கூடாது என கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க : ’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக பாஜக சார்பாக கையெழுத்து இயக்கம் நேற்று துவங்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை போலீசார் கைது செய்தனர், அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா திருமதி தமிழிசை அவர்களைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.

அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.

அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை.

The Chief Minister is staggered by fear says Annamalai

தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?

தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Nayanthara snatched the opportunity given to Popular Actress ரஜினி கூட டான்ஸ்.. சகுனி வேலை பார்த்த நயன்தாரா : நடிகை வருத்தம்!!
  • Leave a Reply