உல்லாசமாக இருக்கும் போது இடையூறு செய்த குழந்தை… கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 May 2023, 7:57 pm
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் மல்லேஷ் என்பவர் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் . அதே சூளையில் சக்திவேல் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
சக்திவேல் புதுவடவள்ளியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
தனது வீட்டுக்காரருடன் பணியாற்றும் மல்லேஷுடன் கலைவாணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சக்திவேலுக்கு தெரிந்தால் அவரால் மல்லேஷுடன் பிரியும் நிலை ஏற்பட்டுவிடுமே என நினைத்துள்ள கலைவாணி அடுத்ததாக ஒரு முடிவு எடுத்துள்ளார்.
இனி மல்லேஷுடன் சென்றுவிடலாம் என முடிவு செய்து அதன்படி கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு கணவருக்கு தெரியாமல் மல்லேஷுடன் சென்றுவிட்டார்.

இருவரும் ஓமலூர் அருகே புதூர்காடம்பட்டியில் வீடு எடுத்து தங்கி, இருவரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணமே ஆகாவிட்டாலும் தம்பதி என சொல்லியே வேலை கேட்டுள்ளனர்.
ஆனால் மல்லேஷுக்கு கலைவாணியின் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும் அவருடைய குழந்தை சதா சர்வகாலமும் அழுது கொண்டே இருப்பதும், உல்லாசமாக இருக்கும் நேரத்தில் கலைவாணி ஓடி போய் குழந்தையை சமாளிப்பதுமாக இருந்ததால் குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது சிறிய சிறிய தகராறு கூட வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று, நீ என்னுடன் வந்துவிட்டாய், அப்படியிருக்கும் போது யாருக்கோ பிறந்த குழந்தை நமக்கு எதற்கு? நாம் பார்க்கும் வேலையில் கிடைக்கும் ஊதியம் வயிற்றுக்கும் வாய்க்குமே போதவில்லை. இதில் குழந்தையை வேறு வளர்க்க வேண்டுமா என மல்லேஷ் கேட்டுள்ளார்.
இதையடுத்து இருவரும் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். பிறகு இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து குழந்தை அழுதுள்ளது.
இதனால் சமாதானம் செய்ய சென்ற கலைவாணியை தடுத்த மல்லேஷ், அவரிடம் இந்த குழந்தை தமக்கு வேண்டாம் என கூறிய நிலையில் இருவரும் மீண்டும் குடித்தனர்.
அப்போது தலைக்கேறிய போதையில் இருந்த நிலையில் குழந்தை மீண்டும் அழுதது. உடனே கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அந்த குழந்தையை சுவற்றில் அடித்துள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்காமல் இருந்ததால் இருவரும் போதையில் உல்லாசமாக இருந்துள்ளனர். மறுநாள் குழந்தையை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தை உடல்நிலை மோசமாக இருந்ததால் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து குழந்தை இறந்த சம்பவத்தை சொல்ல குழந்தையின் பெற்றோரை மருத்துவமனை நிர்வாகம் தேடிய போது அவர்கள் தப்பியோடியது தெரியவந்தது.
இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகாவில் கலைவாணியும் மல்லேஷும் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெயிானது. கலைவாணிக்கு சக்திவேல் 3 ஆவது கணவர்.
அவருக்கு முன்பு இருவரை திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு ஓடி வந்து சக்திவேலையும் திருமணம் செய்த கலைவாணி, மல்லேஷுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியுள்ளார்.
கலைவாணி, மல்லேஷுடன் நடத்திய விசாரணையில் இருவரும் மது அருந்தியது, உல்லாசமாக இருந்தது, குழந்தையை கொன்றது என வாக்குமூலம் அளித்துள்ளனர்.