தேர்தல் அலுவலர் போட்ட கண்டிஷன்.. கடுப்பான பாஜக : வலுக்கட்டாயமாக பாமகவினர் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 1:56 pm

விழுப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் காலை முதல் திமுக அதிமுக என இரு கட்சியினரும் வேட்பாளருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அப்பொழுது கூட இரு கட்சியினரை சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 20 பெயர்களுக்கு மேல் உள்ளே வந்தனர்.

அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கூட ஒரு சிலர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு உள்ளே சென்றனர். இதனை பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தேர்தல் விதி முறையின்படி ஐந்து பேருக்கு மேல் மனு கொடுக்க உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்தார்

இருப்பினும் பாஜகவினர் வெளியே காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.

இதனிடையே பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக மாவட்ட தலைவரிடமும் மாநில துணைச் செயலாளர் இடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்னர் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் அளித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி