போதை ஆசாமியை அரசு பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட நடத்துனர் : வைரலான வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 12:56 pm

அரசு பேருந்தில் இருந்து குடிபோதையில் இருந்த ஆசாமியை நடத்துனர் கீழே தள்ளிய வீடியோ சமூக வளைத்தளத்தில் பரவி வந்த எதிரொலியாக நடத்துனர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் போக்குவரத்து மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செய்யாறு சாலையில் அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணிபுரிபவர் பிரகாஷ், இவர் 477 என் கொண்ட அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

இந்த அரசுப் பேருந்து வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் சென்று மீண்டும் வந்தவாசிக்கு இரவு சுமார் 11 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வந்தது.

அப்போது நேற்று அந்த அரசுப் பேருந்தில் குடிபோதையில் ஒரு நபர் பயணம் செய்துள்ளார். அந்த நபரை அரசுப் பேருந்து நடத்துனர் பிரகாஷ் என்பவர் பேருந்தில் இருந்து கீழே இறங்க சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை.

அப்போது திடீரென அந்த நபரை நடத்துனர் பிரகாஷ் பேருந்தில் இருந்து கீழே தள்ளி உள்ளார். அப்போது அந்த நபர் சாலையில் அப்படியே விழுந்த நிலையிலே கிடந்துள்ளார்.

இதனை பார்த்துவிட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருவதால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் ஜோசப் பேருந்து நடத்துனர் பிரகாஷ் என்பவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ