கழிவுநீர் வடிகாலில் இறங்கி போராடிய தம்பதி மீது கான்கிரீட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 8:53 pm

கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில், ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டும்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பக்கவாட்டு சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் உள் பக்கமாக மேற்கூறையை தாங்கி பிடிப்பதற்காக இரும்பு ஜாக்கிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பக்கவாட்டு சுவற்றில் கான்கிரீட் அமைக்க வீட்டு உரிமையாளரிடம் ஒப்பந்ததாரர் ரூபாய் 43,000 பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

பணத்தை கொடுக்காமல் கான்கிரீட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் தினகரன் கூறிய நிலையில், வீட்டு உரிமையாளர்களான பாலசந்தர், கோமதி தம்பதிகள் இருவரும் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் தினகரன் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து திமுக மாமன்ற உறுப்பினர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் காங்கிரிட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறிய நிலையில் வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குடியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்