சாலை பாதி.. வேலை பாதி : கார் நிற்கும் இடத்திற்கு மட்டும் தார் சாலை போடாத ஒப்பந்ததாரர் : வைரலாகும் போட்டோஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2023, 4:26 pm

காருக்கு மட்டும் தார் சாலை போடாத ஒப்பந்ததாரர்.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா : வைரலாகும் போட்டோஸ்!!!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய தார் சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு தார் சாலை சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் இரு வேறு இடங்களில் கார்கள் நின்றிருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டுவிட்டு மற்ற இடங்களில் தார் சாலை போடப்பட்டு உள்ளது .

சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சாலை சீரமைக்கப்படக்கூடிய நிலையில் இது போன்று கார்கள் நிற்பதை காரணம் காட்டி ஒப்பந்ததாரர் இடைவெளி விட்டு விட்டு தார் சாலை போட்டு சென்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!