நிதியமைச்சரை முற்றுகையிட்டு கோஷமிட்ட நபரின் பரபர பின்னணி.. வங்கி கொடுத்த கடிதத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 9:49 pm

நிதியமைச்சரை முற்றுகையிட்டு லோன் தரவில்லை என கூறி ஆவேசப்பட்ட நபர்.. கடனுதவி வழங்கும் விழாவில் சலசலப்பு!

கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்தவகையில் கடனுதவி வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சதீஷ் என்ற நபர் திடீரென எனக்கு லோன் கிடைக்கவில்லை என மனவேதனைபட்டு வெளியேறினார். இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் சதீஷை வரவழைத்து அவருக்கு ஏன் லோன் கிடைக்கவில்லை என்ன பிரச்சனை என நிர்மலா சீதாராமன் கேட்க உத்தரவிட்டார். பின்னர் மேடையில் மைக்கை கொடுத்து அவருடைய பிரச்சனை பற்றி கூற சொன்னார்.

இதையடுத்து நீங்கள் உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக கடனுதவி வழங்க உதவி செய்துத் தரப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் டால்க் டெல் லைப் ஸ்டைல் என்ற பெயரில் சதீஷ் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் மகள் ஸ்மிரிதி ஆகியோரை பார்டனராக கொண்டு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், மனவி கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 808 ரூபாயை செலுத்தவில்லை என்றும், மகளது வங்கி கணக்கில் ஓவர் டியூ உள்ளதாலும் சிபில் ஸ்கோர் திருப்தியாக இல்லாததால், சதீஷ் அளித்த கடன் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளோம் என்று வங்கி மேலாளர் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சதீஷ்க்கு கடிதம் அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனை மறைத்து மத்திய அமைச்சர் விழாவில் குழப்பம் ஏற்படுத்தவே சதீஷ் இவ்வாறு செய்துள்ளார் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சர் விழாவில் குழப்பம் ஏற்படுத்திய நபரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 538

    0

    0