கத்தி சைஸ் கூட இல்ல… பைக்கில் வந்த தம்பதியை கத்தியை காட்டி செல்போன், பணம் வழிப்பறி : 2 சிறுவர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2023, 4:45 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் (26:07:2023) அன்று மாலை 04:00 மணியளவில் ஒரு தம்பதியினர் நடந்து வந்த போது 3 பேர் சேர்ந்து கத்தி மற்றும் பீர் பாட்டில் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் ரூபாய் 5000 பணம் பறித்து தப்பி ஓடிவிட்டனர்.

உடனே தம்பதியினர் திருவலம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி ஆலோசனைப்படி காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் திருவலம் காவல்
உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமை காவலர் செந்தில்குமார் திருவலம் பகுதியில் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருவலம் கூட்ரோடு பகுதியில் சந்தேகம் படும் படியாக 3-பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தனர். உடனே 3 பேரை திருவலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணைக்கு பின் கரிகிரி மலை அடிவாரத்தில் கத்தி மற்றும் பீர் பாட்டில் காட்டி செல்போன் மற்றும் பணம் பறித்தது ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்கள் காட்பாடி கசம் பகுதியை சேர்ந்த வேதகிரி மகன் நவீன்குமார் வயது-19 மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 307

    0

    0