சென்னையில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய தம்பதி.. கொள்ளிடம் பாலத்தில் இருந்து பாய்ந்த கார்.. சுக்குநூறாக சிதறிய சடலங்கள்!
Author: Udayachandran RadhaKrishnan8 December 2023, 11:17 am
சென்னையில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய தம்பதி.. கொள்ளிடம் பாலத்தில் இருந்து பாய்ந்த கார்.. சுக்குநூறாக சிதறிய சடலங்கள்!
கேரள மாநிலம் இடுக்கியை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் நேற்று இரவு சென்னையில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டார். இன்று அதிகாலை இவர்களது கார் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் வந்த போது கார் அவரது கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் கார் நொறுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவல் அறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் உடனடியாக சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரை ஓட்டிய ஸ்ரீநாத் கண் அயர்ந்து விட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.