‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’…ஆட்டுக்குட்டிகளுக்கு தாயான பசு: பாலூட்டும் நெகிழ்ச்சி வீடியோ!!
Author: Rajesh15 April 2022, 11:23 am
விருதுநகர்: நரிக்குடி அருகே பாசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள நாலூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் 5 பாசு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20 நாட்கள் ஆன 2 ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் பசியின் காரணமாக சுற்றித்திரிந்த அந்த ஆட்டுக்குட்டிகள் பசுமாட்டிடம் பால் குடித்தது. அந்த பாசுமாடும் ஓடாமல் அதே இடத்தில் நின்று கொண்டு ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்தது.
தான் ஈன்ற குட்டி போல் நினைத்தது தினந்தோறும் அந்த இரண்டு ஆட்டு குட்டிகளுக்கு பசும்மாடு பால்கொடுக்கும்
இச்சம்பவம் அப்பகுதி மக்களுகிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.