பைக்கில் சென்றவரை முட்டி தூக்கிய பசு மாடு.. நொடிப்பொழுதில் நிலை தடுமாறி நடந்த சோகம்..!

Author: Vignesh
2 September 2024, 1:36 pm

மேட்டுப்பாளையத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டுநரை முட்டி தூக்கி வீசிய பசு மாட்டின் சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரில் ஆங்காங்கே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை மற்றும் பிரதான சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் அபாய சூழ்நிலையும் காணப்படுகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்ததன் பேரில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் ஒரு சில நேரங்களில் மட்டும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து வருகிறார். கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில், இன்று மாலை மேட்டுப்பாளையம் சிறுமுகை சங்கர் நகர்பகுதியில், சாலையில் இரண்டு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளில் ஒரு மாடு திடீரென எதிர்பாராத விதமாக இரண்டு சக்கர வாகன ஓட்டுநரை முட்டி தூக்கி வீசியது.

இதில், இரண்டு சக்கர வாகனம் சற்று தூரம் சாலையில் இழுத்துச் சென்றது. இதில், ஆண் பெண் குழந்தையென மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. குழந்தை உடன் வந்த ஆண் பெண் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்று உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!