படக்குழு வைத்த செக்.. அந்த விஷயத்திற்காக மெனைகிட்டு வரும் சிம்பு..!
Author: Rajesh13 April 2022, 12:49 pm
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பினை ஒரு வழியாக முடித்துக்கொடுத்தார் சிம்பு. அந்த படத்திற்கான அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிம்பு இந்த படத்தை பல போராட்டங்களுக்குப் பின் முடித்துள்ளார். இதற்கு காரணம் மாநாட்டிற்கு அவர் உடல் மிகவும் மெலிந்து போனார். ஆனால் மாநாட்டிற்கு முன்னரே வெந்து தணிந்தது காடு ஸ்டில்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆகியது. அதனால் அந்த மாதிரி சிம்பு வேண்டுமென்று நிறைய விஷயங்கள் மெனைகிட்டு செய்தது படக்குழு.
இது ஒரு புறமிருக்க இயக்குனர் நார்தன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்புவின் அடுத்த படமான திரில்லர் படம் ‘பத்து தல’ படத்திற்குக்கும் பல மாறுதல்களை தேவைப்படுகிறது. அந்த படத்திற்கு சிம்பு 20 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
அதற்கு முன்னர் சிம்புவிற்கு 15 நாள் கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் அந்த படத்திற்கு தேவையான மாதிரி மாறிவிட வேண்டும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இதனால் இந்த 15 நாட்களில் சிம்பு அடர்த்தியான தாடி வளர்க்க வேண்டும் படத்தின் கெட்டப் அப்படி.
ஆனால் அதை அசால்ட்டாக எடுத்துக் கொண்ட சிம்பு, கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் தாடி மீசை வளர்ப்பதில் கவனம் செலுத்தாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கிளம்பிவிட்டார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்த உடன் படக்குழு கொடுத்துள்ள மீதமிருக்கும் நாட்களில் அவர்கள் சொன்ன கெட்டப்பில் மாற அரக்கப்பரக்க சிம்பு வேலையை பார்க்க துவங்கி இருக்கிறார். இதற்காக தற்போது சிம்பு, இந்த படத்திற்கு தாடி வளர்ப்பதற்காக பல விஷயங்களை மெனைகிட்டு வருகிறாராம் .