இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாள்… தேவாலயங்களில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 10:23 am

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தவக்காலம் 40 நாட்கள் அனுசரிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று மரித்து மூன்றாவது நாளான ஞாயிறு அன்று உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் என அழைக்கப்படும் இயேசு உயிர்ப்பு விழாவை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இதனையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , சிறப்பு நடு இரவு திருப்பலி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

திருப்பலியின் போது இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அதன்பின் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!