பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு.. கார் விபத்தில் பலியான சோகம் : மேலும் இருவர் படுகாயம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 11:08 am

அரியலூர் மாவட்டம் செந்துறை சாலை அருகே வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சிவகுமார் (55) ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டு அங்கிருந்து மற்றொரு ரியல் எஸ்டேட் அதிபரான தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டையை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பீட்டர் பிரான்சிஸ் (54) என்பவருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த காரில் பீட்டர் பிரான்சிஸ் மகன் நவீன் (23) என்பவரும் சென்றுள்ளார். இந்த கார் இன்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டை அருகில் சென்று கொண்டிருந்த போதும் முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கார் முற்றிலும் நசுங்கி சேதம் அடைந்தவுடன் காரில் சென்ற சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க: இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி நிலவரம் : டாப்பில் இமாச்சல்.. கடைசியில் ஒடிசா!

காரில் சென்ற பீட்டர் பிரான்சிஸ் மற்றும் அவருடைய மகன் நவீன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!