தீர்ப்பு வெளியான பின் இபிஎஸ் எடுத்த முடிவு… உடனே பறந்த அதிரடி உத்தரவு : உற்சாகத்தில் அதிமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 1:11 pm

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி நாடு முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் மாதம் 5,6,7 மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள், ‘இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
மார்ச் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மார்ச் மாதம் 10,11,12 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 5 ஆம் தேதி சென்னை ஆர்கே நகர் பகுதியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரிலும்,தங்கமணி குமாரபாளையத்திலும், உரையாற்ற உள்ளனர்.

7 ஆம் தேதி வேலூரில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனும், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வதாந்தனும், ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போலமார்ச் 5,6,7 ஆம் தேதி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 303

    0

    0