மீண்டும் கட்சி மாற முடிவு? நடிகர் விஜய் கட்சியில் இணைகிறார் நடிகை காயத்ரி ரகுராம்? பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 6:47 pm

மீண்டும் கட்சி மாற முடிவு? நடிகர் விஜய் கட்சியில் இணைகிறார் நடிகை காயத்ரி ரகுராம்? பரபரப்பு தகவல்!!

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள விஜய் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் காயத்ரி ரகுராம் அதிமுகவை விட்டு விலகி விஜய் கட்சியில் இணைய உள்ளதாக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.

அதாவது பல்சர் 220 என்ற பெயரில் கொண்ட எக்ஸ் பக்கத்தில், ‛‛கட்சி தாவ தயாராகும் நடிகை காயத்ரி ரகுராம்! சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி தனக்கு எந்த பதவியும் இப்போதைக்கு தரப்படாது என்றபோதியிலும் அரசியல் அடைக்கலம் தேடி அங்கு இணைந்துள்ளார். நடிகர் விஜய் ஆரம்பித்த TVK Party யில் இணைய புஸ்சி ஆனந்த் உடன் பேச்சுவார்த்தை என்ற தகவல்” என பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு காயத்ரி ரகுராம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த கருத்தை பதிவிட்ட நபருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பதிவை குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த விரக்தியடைந்த ஆன்மாவிற்கு நான் வருந்துகிறேன். தீவிர லூசுதனம் எப்போதும் என்னை குறிவைக்கிறது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாக பணியாற்றக்கூடிய இடம் அதிமுக. நிர்வாகம் தெரிந்த அ.தி.மு.க.வை மட்டுமே ஆட்சி செய்ய மக்கள் விரும்புவார்கள். தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அதிமுக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. நான் எப்போதும் அதிமுக மூலம் சேவை செய்வேன் மக்களுக்காக.

பதவி ஒதுக்கப்பட்ட வேலை, நான் அது இல்லாமல் வேலை செய்வேன். 6 நாட்கள் நான் குடும்ப திருமணத்தில் பிஸியாக இருந்தேன். அதுக்காக உங்களுக்கெல்லாம் ஏன் இப்படி குழப்பம். எப்போதும் குழப்பமான பைத்தியக்காரர்கள் அண்ணாமலையின் வார்ரூமில் மட்டுமே இருக்க முடியும்” எனக்கூறியுள்ளார். இதன்மூலம் விஜயின் கட்சியில் அவர் இணைவதாக பரவும் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 428

    0

    0